இந்தியா

குஜராத், ராஜஸ்தானில் ஆயுர்வேத கல்லூரியைத் திறந்துவைத்த பிரதமர்

13th Nov 2020 12:14 PM

ADVERTISEMENT

ஆயுர்வேத நாளையொட்டி குஜராத் மற்றும் ராஜஸ்தானில் இரண்டு ஆயுர்வேத கல்லூரியை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் தன்வந்தரி ஜெயந்தியையொட்டி ஆண்டுதோறும் நவம்பர் 13-ஆம் தேதி ஆயுர்வேத  நாளாகக்  கடைப்பிடிக்கப்படுகிறது.

அந்தவகையில் இன்று  (வெள்ளிக்கிழமை) ஆயுர்வேத நாளையொட்டி இரண்டு ஆயுர்வேத கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக தொடக்கி வைத்தார்.

குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியில் உலகத்தரத்தில் தொடங்கப்பட்டுள்ள ஆயுர்வேதம் கற்றல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 12 பிரிவுகளும், மூன்று மருத்துவ ஆய்வகங்களும், மூன்று ஆராய்ச்சிக் கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : Narendra Modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT