இந்தியா

'கரோனா காலத்தில் ஆயுர்வேத பொருள்களின் தேவை அதிகரித்துள்ளது'

13th Nov 2020 03:04 PM

ADVERTISEMENT

கரோனா காலகட்டத்தில் ஆயுர்வேத பொருள்களின் தேவை அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஆயுர்வேத நாளையொட்டி குஜராத் மாநிலம் ஜாம்நகரிலும், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலும் ஆயுர்வேத கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாகத் தொடக்கி வைத்தார்.

பின்னர் பேசிய அவர், ''ஒருங்கிணைந்த மருத்துவ உலகில் ஆயுர்வேதம் மிகமுக்கிய பங்காற்றுவதாகக் கூறினார். பண்டைய இந்தியாவின் பாரம்பரியம் மிக்க அறிவியல் 21-ஆம் நூற்றாண்டின் அறிவியலோடு ஒருங்கிணைகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் மஞ்சள் போன்ற இந்தியாவின் பாரம்பரியம் மிக்க ஆயுர்வேத பொருள்களுக்கு உலக அளவில் தேவை அதிகரித்துள்ளது'' என்று கூறினார்.

''நம் நாட்டில் அதிக அளவிலான மக்கள் தொகை இருந்தாலும், மஞ்சள் போன்ற பொருள்களை வீடுகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தியதால் கரோனா பரவல் கட்டுக்குள் இருந்தது. இதனால், மஞ்சள், அஸ்வகந்தா போன்ற மூலிகைப் பொருள்களின் தேவை அதிகரித்துள்ளது'' என்று குறிப்பிட்டார். 

ADVERTISEMENT

ஆயுர்வேத கல்லூரி திறப்பு நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

Tags : Narendra Modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT