இந்தியா

தில்லி காற்று மாசு: தீபாவளிக்கு மிக மோசமடைய வாய்ப்பு

13th Nov 2020 04:48 PM

ADVERTISEMENT

தில்லியில் தீபாவளி நாளன்று காற்று மாசு மிக மோசமான நிலையை அடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தில்லியில் ஏற்கனவே காற்று மாசு மோசமான நிலையில் இருப்பதாகவும், தீபாவளி நாளன்று காற்று மாசு தீவிரமடைந்து மிக மோசமான நிலையை அடையும் என்றும் எச்சரித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சுற்றுச்சூழல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் வி.கே.சோனி பேசியதாவது, ''தில்லியில் ஏற்கனவே காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், தீபாவளி நாளன்று மேலும் புகை அதிகரித்தால் காற்றின் தரம் மோசமான நிலையை அடையும். நவம்பர் 15-ஆம் தேதி மழை பெய்ய வாய்ப்புள்ளதால் காற்றின் தரக் குறியீட்டில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது'' என்று கூறினார்.

வார இறுதி மற்றும் பண்டிகை நாள்களையொட்டி வாகனப்போக்குவரத்து அதிகரித்துள்ளதால், தில்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தில்லியின் காற்று தரக்குறியீடு மற்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

கரோனா பரவல் மற்றும் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் தில்லியில் நவம்பர் 9-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை பட்டாசு வெடிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Delhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT