இந்தியா

கரோனா: 'கடந்த 41 நாள்களாக குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு'

13th Nov 2020 03:30 PM

ADVERTISEMENT

நாட்டில் கடந்த 41 நாள்களாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் கடந்த சில நாள்களாக கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் கரோனா பரிசோதனைகளை விரிவுபடுத்துவதன் மூலமே தொற்று பரவலைக் கட்டுப்படுத்த இயலும் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் ஒரு சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது நவம்பர் மாதம் வரை 12 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அளித்த தகவலின்படி இதுவரை 12,31,01,739 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று (வியாழக்கிழமை) மட்டும் 11,39,230 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 

இத்தகைய தொடர் பரிசோதனைகளின் விளைவாக கடந்த 41 நாள்களாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT