இந்தியா

ராகுல் குறித்து பராக் ஒபாமா விமரிசனம்: கருத்துக் கூற காங்கிரஸ் மறுப்பு

13th Nov 2020 04:29 PM

ADVERTISEMENT

புது தில்லி: மிகவும் பதற்றமானவர் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் குறித்து அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பது பற்றி கருத்துக் கூற காங்கிரஸ் கட்சி மறுத்துவிட்டது.

மேலும், ஒரு தனிப்பட்ட நபரின் கருத்துகளைக் கொண்ட புத்தகம் பற்றி, பின்னால் இருந்து இயக்கப்படும் ஊடகத்தில் வெளியான செய்திகள் குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

சில காங்கிரஸ் தலைவர்கள் பராக் ஒபாமாவின் கருத்தை எதிர்த்திருக்கிறார்கள். "ஒபாமா அவர்களே, யார் ஒருவராலும் வெறும் 5 முதல் 10 நிமிடத்தில் ஒருவரைப் பற்றி அறிந்து கொள்ள முடியாது. சில சமயங்களில் பல ஆண்டுகள் கூட ஆகலாம். ராகுல் காந்தியைப் பற்றி நீங்கள் மதிப்பிட்டது தவறு" என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் உதித் ராஜ் கூறியுள்ளார். 

பதற்றமானவர், பக்குவப்படாத தலைவர் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது நினைவுக் குறிப்புப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாக ஆங்கில ஊடகத்தில் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

Tags : காங்கிரஸ் கட்சி rahul gandhi barack obama
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT