இந்தியா

ஆந்திரத்தில் யானை மிதித்து விவசாயி பலி

13th Nov 2020 03:12 PM

ADVERTISEMENT

ஆந்திரத்தில் யானை மிதித்ததில் விவசாயி ஒருவர் பலியானார். 

ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள பரசுராம்புரத்தைத் சேர்ந்தவர் விவசாயி லஷ்ம நாயுடு(52). இவர் இன்று அதிகாலை வழக்கம்போல் தனது விவாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் முகாமிட்டிருந்த யானை ஒன்று விவசாயி லஷ்ம நாயுடுவை மிதித்தது. 

இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பார்வதிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னர், இறந்த விவசாயின் குடும்பத்தினருக்கு ரூ .5 லட்சம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

Tags : Andhra
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT