இந்தியா

’தனிமனித ராணுவமாக செயல்பட்டுள்ளீர்கள்’: தேஜஸ்விக்கு மெகபூபா முப்தி வாழ்த்து

11th Nov 2020 09:29 PM

ADVERTISEMENT

பிகார் தேர்தலில் சிறப்பாக செயல்பட்டதாக ஆர்ஜேடி கட்சியின் தேஜஸ்வி யாதவிற்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில்,  “வாழ்த்துக்கள் தேஜஸ்வி. பிளவுபடுத்தும் அரசியலுக்கு மாறாக பிகார் தேர்தலில் மக்களின் உண்மையான பிரச்னைகளை பேசி வாக்கு சேகரித்துள்ளீர்கள். தனிமனித ராணுவமாக இருந்தபோதும் நீங்கள் கடுமையாக சண்டையிட்டீர்கள்.” என முப்தி தெரிவித்துள்ளார்.

பிகாரில் நேற்று (செவ்வாய்க் கிழமை) நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் ராஷ்டிரிய ஜனதா தளம் 75 இடங்களில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Bihar election 2020
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT