இந்தியா

ஓடிசாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் படுகொலை

11th Nov 2020 04:48 PM

ADVERTISEMENT

 

புபனேஸ்வர்: ஓடிசாவின் போலாங்கிர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓடிசாவின் போலாங்கிர் மாவட்டத்தில் பட்நாகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சன்ரபடா கிராமத்தில் வசித்து வருபவர் புலு ஜானி. புதன்கிழமையன்று வீட்டில் அவர், அவரது மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் என ஆறுபேரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். இது கிராமத்தில் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மத்கர் சந்தீப் சம்பத் கூறுகையில், ‘உடல்கள் தற்போது பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையில் அவர்களனைவரும் கூர்மையான ஒரு ஆயுதத்தால் கொல்லப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.          

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT