இந்தியா

‘கரோனா தடுப்பூசி விநியோகத்திற்கு திட்டம் தேவை’: ராகுல்காந்தி வலியுறுத்தல்

11th Nov 2020 05:05 PM

ADVERTISEMENT

கரோனா தடுப்பூசியை அனைத்து இந்தியர்களுக்கும் கிடைக்கும் வண்ணம் விநியோகிக்க சரியான திட்டம் தேவை என காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

மருந்து நிறுவனமான ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் இணைந்து தயாரித்துள்ள கரோனா தடுப்பூசி 90% கரோனா பாதிப்பிலிருந்து மீள உதவுவதாக செவ்வாய்க்கிழமை செய்திகள் வெளியாகின. கரோனா தொற்று மத்தியில் மிக முக்கியமான அறிவிப்பாக இது பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து தனது சுட்டுரைப் பதிவில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி, “ஒரு நம்பிக்கைக்குரிய தடுப்பூசியை உருவாக்கியிருந்தாலும், அதை ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைக்கச் செய்வதற்கான விநியோகத் திட்டங்கள் வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

 

ADVERTISEMENT

மேலும் “கரோனா தடுப்பூசி ஒவ்வொரு இந்தியரையும் எவ்வாறு அடைய வேண்டும் என்பதை அரசு வரையறுக்க வேண்டும்” என அவர் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : Rahulgandhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT