இந்தியா

'பிகார் மக்கள் 4-வது முறையாக எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்'

11th Nov 2020 03:56 PM

ADVERTISEMENT

பிகார் மக்கள் எங்கள் மீது 4-வது முறையாக நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளதாக அந்த மாநில துணை முதல்வர் சுஷில் மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலில் ஒருசில முதல்வர் வேட்பாளர் மீது மட்டுமே மக்கள் 4-வது முறையாக நம்பிக்கை வைப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யூ) இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக அளவிலான இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. 

இது குறித்து பேசிய பிகார் துணை முதல்வர் சுஷில் மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார். 

ADVERTISEMENT

இது குறித்து அவர் மேலும் பேசியதாவது, ''இது வழக்கமான ஒன்றல்ல. இந்திய அரசியல்வாதிகளில் ஒரு சில முதல்வர் வேட்பாளருக்கு மட்டுமே நான்காவது முறையாக மக்களின் நம்பிக்கை கிடைக்கும். மக்கள் தெளிவான முடிவினை அறிவித்துள்ளனர். இதில் எந்த குழப்பமும் இல்லை என்று தெரிவித்தார். 

கூட்டணியில் அனைவரும் சமமான இடங்களில் வெற்றி பெறவில்லை. பலதரப்பட்ட இடங்களை கூட்டணிகள் பெற்றுள்ளன. ஐக்கிய ஜனதாவின் வெற்றிக்கு பாஜக உழைத்தது. பாஜகவின் வெற்றிக்காக ஐக்கிய ஜனதா உழைத்தது. 

கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டதால் இந்த வெற்றியை அடைய முடிந்தது'' என்று அவர் கூறினார்.

Tags : Bihar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT