இந்தியா

தீபாவளி: பொதுமக்களுக்கு மத்திய ஜவுளி அமைச்சகம் வேண்டுகோள்

11th Nov 2020 04:41 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: உள்ளூர்ப் பொருள்களுடன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் மக்கள் அனைவரும் #Local4Diwali என்ற ஹேஷ்டாக்டுடன் சமூக வலைத்தளங்களில் தங்களது புகைப்படங்களைப் பகிருமாறு மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாட்டு மக்கள் அனைவரும் இந்திய கைவினைப் பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துமாறு பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்த நிலையில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கூறியுள்ளதாவது : “கடந்த ஒன்பதாம் தேதி பிரதமர் விடுத்த வேண்டுகோளை அடுத்து, உள்நாட்டுத் துணிகள், கைவினைப் பொருள்களின் வர்த்தகத்தை ஊக்குவிக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம். சிறு அகல் விளக்காக இருக்கட்டும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் துணி வகைகள், படுக்கை விரிப்புகள், திரைச்சீலைகளாக இருக்கட்டும், நமது அன்பிற்குரியவர்களுக்கான அன்பளிப்பாக இருக்கட்டும்.. இந்த தீபாவளியை முன்னிட்டு நாம் வாங்கும் அனைத்துப் பொருள்களும் நம்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களாக அமையட்டும். இந்திய நெசவாளர்கள், கைவினைக் கலைஞர்கள், உள்நாட்டு மற்றும் சிறிய வணிகர்களிடமிருந்து நீங்கள் வாங்கும் பொருட்கள் குறித்து ட்விட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்வதுடன், #Local4Diwali என்ற ஹேஷ்டேகையும் பயன்படுத்தி தீபாவளி விற்பனையை ஊக்குவிக்கலாம். துணி வகைகள், கைவினைப் பொருட்கள், அல்லது தீபாவளிக்கு வாங்கும் பரிசுப்பொருட்களை புகைப்படம் எடுத்து அதை விற்பனை செய்பவரையும் குறிப்பிட்டு #Local4Diwali என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தவும். இதுபோன்ற சவாலான தருணங்களில் உங்களது ஆதரவினால் ஏராளமானோருக்கு பெரும் உதவியாக இருக்கும்.” என்று வலியுறுத்தியுள்ளது.
 

ADVERTISEMENT

Tags : diwali
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT