இந்தியா

உற்பத்தித் துறைக்கு ரூ.1.5 லட்சம் கோடி சலுகைகள்: மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

11th Nov 2020 04:25 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: உற்பத்தித் துறைக்கு ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிற்கு சலுகைகள் அளிப்பது என்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதனன்று பிரதமர் மோடி தலைமையில் தில்லியில் விடியோ கான்பெரன்சிங் முறையில் நடைபெற்றது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் இருவரும் செய்தியாளர்களிடம் எடுத்துரைத்தனர்.

ADVERTISEMENT

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ‘பிரதமர் மோடி கூறியபடி சுயசார்பு இந்தியாவை உறுதிப்படுத்தும் நோக்கில் பல்வேறு முதலீட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக  10 முக்கிய உற்பத்தித் துறைகளுக்கு சலுகைகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏசி, எல்.இ.டி பல்ப் உள்ளிட்ட பொருட்கள், ஸ்டீல் ஆகியவற்றின் உற்பத்திக்கு ஊக்கம் வழங்கப்படுகிறது. அதேபோல்  மருத்துவம், மின்னணு உள்ளிட்ட துறைகளில் உற்பத்தியை அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்கவும் முடிவு செய்யபட்டடுள்ளது’ என்று தெரிவித்தார்.

மற்றொரு அமைச்சரான பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ‘உற்பத்தித் துறைக்கு ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிற்கு சலுகைகள் வழங்கப்பட உள்ளன. வாகனங்கள், ஜவுளி நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய உற்பத்தி நிறுவனங்களுக்கு இதன்மூலம் சலுகைகள் கிடைக்கும்’ என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT