இந்தியா

மேற்கு வங்கத்தில் 8 மாதங்களுக்குப் பிறகு ரயில்சேவை தொடக்கம்

11th Nov 2020 01:06 PM

ADVERTISEMENT

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 8 மாத கரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு உள்ளூர் மற்றும் புறநகர் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டன.

கரோனா பெருந்தொற்றால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 696 புறநகர் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டுள்ளன. எனினும் தொற்று அபாயத்தால் ரயில்களில் கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படுகின்றன.

நாட்டில் கரோனா தொற்று பரவி வருவதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் ரயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவை முழுவதுமாக முடக்கப்பட்டிருந்தது.

இதனிடையே தொற்று பரவல் விகிதத்திற்கு ஏற்ப மாநில அரசுகள் தளர்வுகளை அறிவித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து மாநில அரசுகள் தளர்வுகளை அறிவித்து வருகின்றன.

ADVERTISEMENT

அந்தவகையில் மேற்குவங்கத்தில் உள்ளூர் மற்றும் புறநகர் ரயில்சேவை இன்று (புதன்கிழமை) முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. 

மேற்குவங்கத்தில் புதன்கிழமை முதல் ரயில்சேவை தொடங்கப்படும் என்றும், பயணிகளின் பாதுகாப்பை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சுட்டுரையில் பதிவிட்டிருந்தார்.

ரயில்களில் பயணம் செய்யும் பணிகள் முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் போன்ற கரோனா தடுப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கிழக்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ரயில் பெட்டிகள் நாள்தோறும் கிருமிநாசினி கொண்டு கழுவப்படும் என்றும், பயணிகளின் நடவடிக்கையை கண்காணிக்க ரயில்வே மற்றும் சிவில் காவல்படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தென்கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதேபோன்று புதன்கிழமை முதல் மெட்ரோ ரயில்சேவையும் 25 சதவிகிதம் அதிகரிக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலை மற்றும் மாலை அலுவல் நேரங்களில் 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : west bengal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT