இந்தியா

106 நாள்களுக்குப் பிறகு 5 லட்சத்துக்கும் கீழ் குறைந்த கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை

11th Nov 2020 01:02 PM

ADVERTISEMENT

நாட்டில் 106 நாள்களுக்குப் பிறகு கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள தகவலில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 44,481 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 512 போ் உயிரிழந்தனர். 

இதையடுத்து மொத்த பாதிப்பு 86,36,012 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,27,571 ஆகவும் அதிகரித்துள்ளது. 

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 50,326 போ் உள்பட இதுவரை 80,13,784 பேர் குணமடைந்துள்ளனர். அதாவது மொத்த பாதிப்பில் 92.69 சதவீதம் போ் குணமடைந்தனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, நாடு முழுவதும் 4,94,657 போ் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 5.83 சதவீதமாகும். 

இந்தியாவில் கரோனா பாதிப்பு கடந்த 3 மாதங்களாக அதிகரித்து வந்த நிலையில் சமீபமாக குறைந்து வருகிறது. 106 நாள்களுக்குப் பிறகு நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. 

மத்திய அரசின் முறையான வழிகாட்டு நெறிமுறைகளாலும், மாநில அரசுகள் அதனை சரியான பின்பற்றி வருவதாலும் நாட்டில் பாதிப்பு குறைந்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT