இந்தியா

குஜராத்தில் நவம்பர் 23 முதல் கல்வி நிலையங்கள் திறப்பு

11th Nov 2020 06:21 PM

ADVERTISEMENT

குஜராத் மாநிலத்தில் கரோனா தொற்று பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் நவம்பர் 23ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கரோனா தொற்று பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இணைய வழியில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நவம்பர் மாதம் 23ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் எனவும், நவம்பர் 23ஆம் தேதியே கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கும் கல்லூரி வகுப்புகள் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக ஆந்திரம், பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Gujarat
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT