இந்தியா

பிகார் தேர்தல் வெற்றி: நிதிஷ் குமாருக்கு தலாய் லாமா வாழ்த்து

11th Nov 2020 06:40 PM

ADVERTISEMENT

பிகார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நிதிஷ் குமாருக்கு திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ள அவர், ''உங்களது நட்பிற்கும், பிகார் வரும்போது கொடுக்கப்படும் விருந்தோம்பலுக்கும் மிகுந்த பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பண்டைய இந்திய சிந்தனைகள் குறித்த எனது ஆர்வம் மற்றும் அதனை கொண்டு சேர்க்கும் எனது முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். 

பிகார் மக்களின் நம்பிக்கைகளை நிறைவேற்றுவதற்காக நீங்கள் சந்திக்கும் சவால்களில் வெற்றி பெறுவதற்காக வேண்டிக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

பிகாரில் நேற்று (செவ்வாய்க் கிழமை) நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் பாஜக 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

Tags : Bihar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT