இந்தியா

பிகார் தேர்தல்: 68% வெற்றியாளர்கள் குற்றப் பின்னணி உடையவர்கள்

11th Nov 2020 06:49 PM

ADVERTISEMENT


பிகார் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 68 சதவிகிதத்தினர் குற்றப் பின்னணி உடையவர்கள் என்பது பிகார் தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்தத்துக்கான கூட்டமைப்பு (ஏடிஆர்) தெரிவித்துள்ளது.

இதில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் முதலிடத்தை வகிக்கிறது.

பிகார் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 243 பேரில் 241 வெற்றியாளர்களின் பிரமாணப் பத்திரங்களை ஏடிஆர் ஆய்வு செய்துள்ளது. அந்த 241 பேரில் 163 பேர் குற்றப் பின்னணி உடையவர்களாக உள்ளனர். 163 பேரில் 123 பேர் கொலை, கொலை முயற்சி, கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற முக்கியக் குற்றப் பின்னணி உடையவர்களாக உள்ளனர்.

முக்கியக் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ள 123 பேரில் 19 பேர் கொலை வழக்குகள், 31 பேர் மீது கொலை முயற்சி வழக்குகள் மற்றும் 8 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குகள் உள்ளன. 

ADVERTISEMENT

2015 பேரவைத் தேர்தலில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் 142 பேர் (58 சதவிகிதத்தினர்) இதேபோல் முக்கியக் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதை குறிப்பிட்டிருந்தனர்.

கட்சி வாரியாக நிலுவையிலுள்ள குற்றவியல் வழக்குகள்:

ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் வெற்றி பெற்ற 74 பேரில் 54 பேர் (73 சதவிகிதம்) மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

பாஜக சார்பில் வெற்றி பெற்ற 73 பேரில் 47 பேர் (64 சதவிகிதம்) மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஐக்கிய ஜனதா தளம் சார்பில் வெற்றி பெற்ற 43 பேரில் 20 பேர் (47 சதவிகிதம்) மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற 19 பேரில் 16 பேர் (84 சதவிகிதம்) மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்தியக் கம்யூனிஸ்ட் (எம்.எல்.எல்.) சார்பில் வெற்றி பெற்ற 12 பேரில் 10 பேர் (83 சதவிகிதம்) மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற 5 பேரில் 5 பேர் (100 சதவிகிதம்) மீதும் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கட்சி வாரியாக நிலுவையிலுள்ள முக்கியக் குற்றவியல் வழக்குகள்:

ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் வெற்றி பெற்ற 74 பேரில் 44 பேர் (60 சதவிகிதம்) மீது முக்கியக் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

பாஜக சார்பில் வெற்றி பெற்ற 73 பேரில் 35 பேர் (48 சதவிகிதம்) மீது முக்கியக் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஐக்கிய ஜனதா தளம் சார்பில் வெற்றி பெற்ற 43 பேரில் 11 பேர் (26 சதவிகிதம்) மீது முக்கியக் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற 19 பேரில் 11 பேர் (58 சதவிகிதம்) மீது முக்கியக் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்தியக் கம்யூனிஸ்ட் (எம்.எல்.எல்.) சார்பில் வெற்றி பெற்ற 12 பேரில் 8 பேர் (67 சதவிகிதம்) மீது முக்கியக் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற 5 பேரில் 5 பேர் (100 சதவிகிதம்) மீதும் முக்கியக் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Tags : Bihar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT