இந்தியா

தெலங்கானாவில் இன்றைய கரோனா பாதிப்பு 1,267

10th Nov 2020 12:54 PM

ADVERTISEMENT

 

 

தெலங்கானாவில் இன்று புதிதாக 1,267 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த நாட்டில் மொத்த பாதிப்பு 2,52,455 ஆக உயர்ந்துள்ளது. 

நாட்டில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தெலங்கானாவில் இன்றைய பாதிப்பு நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

ADVERTISEMENT

அதன்படி, இன்று தெலங்கானாவில் புதிதாக 1,267 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதித்து 4 பேர் பலியாகியுள்ளதை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 1,385 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 1,831 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,32,489 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 18,581 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

இந்தியாவில் ஒரேநாளில் புதிதாக 50 ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 8,59 லட்சத்தை தாண்டியுள்ளது. 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT