இந்தியா

பெங்களூருவில் கைப்பற்றப்பட்ட ரூ.28 லட்சம் ‘ஹவாலா’ பணம்!

10th Nov 2020 03:20 PM

ADVERTISEMENT

 

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சட்டவிரோதமாக ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்யப்பட்ட ரூ. 28 லட்சத்தைக் கைப்பற்றியுள்ள போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

பெங்களூரு மாநகர காவல்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள் மற்றும் சிறப்பு விசாரணைப் பிரிவு காவலர்கள் இணைந்து எடுத்த நடவடிக்கையில், திங்களன்று பெங்களூருவின் கப்பன் பீட்டே பகுதியில் பங்கஜ் படேல் என்பவர் ரூ.28 லட்சத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கைது குறித்து பெங்களூரு மாநகர காவல்துறை துணை ஆணையர் சந்தீப் பட்டில் விடுத்துள்ள அறிக்கையில், ‘கைது செய்யப்பட்டுள்ள சந்தேகத்துக்குரிய பங்கஜ் படேல் சட்டவிரோத ஹவாலா பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரிடம் இருந்து ரூ.28 லட்சம் ரொக்கமும், அலைபேசி ஒன்றும் மற்றும் ஒரு பணம் எண்ணும் இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்மீது ஹலசூரு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT