இந்தியா

பிகாரில் மகா கூட்டணிதான் ஆட்சியமைக்கும்: ஆர்ஜேடி நம்பிக்கை

10th Nov 2020 04:16 PM

ADVERTISEMENT

பிகாரில் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும்நிலையில் மகா கூட்டணிதான் ஆட்சியமைக்கும் என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது.

243 பேரவைத் தொகுதிகள் கொண்ட பிகாரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய சூழல் வரையில் 42% வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளம் தனது சுட்டுரைப் பதிவில், “மகா கூட்டணிதான் பிகாரில் ஆட்சியமைக்கும்.” என தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT

மேலும் அந்தப் பதிவில், “களத்தில் இருந்து வரும் தகவல்களின்படி பல்வேறு தொகுதிகள் நமது கட்சிக்குத் தான் சாதகமாக உள்ளன.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கரோனா பரவல் காரணமாக வாக்குச்சாவடி மையங்கள் அதிகரிக்கப்பட்டிருந்ததால் வாக்கு எண்ணிக்கை தாமதமாகி வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிகாரில் இதுவரை தேசிய ஜனநாயகக் கூட்டணி 132 தொகுதிகளிலும், மகா கூட்டணி 99 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன.

Tags : Bihar election 2020
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT