இந்தியா

சிபிஐக்கான பொதுஒப்புதலை ரத்து செய்த 7ஆவது மாநிலமானது பஞ்சாப்

10th Nov 2020 01:18 PM

ADVERTISEMENT

பஞ்சாப் மாநிலத்தில் சிபிஐ அமைப்புக்கு வழங்கப்பட்டு வந்த பொதுஒப்புதலை மாநில அரசு திங்கள்கிழமை திரும்பப் பெற்றது.

காங்கிரஸ் கட்சி தலைமையில் அமரீந்தர் சிங் ஆட்சி செய்து வரும் பஞ்சாப் மாநிலத்தில் மத்திய புலனாய்வுப் பிரிவிற்கு (சிபிஐ) வழங்கப்பட்டு வந்த பொது ஒப்புதல் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் காலத்தில் மாநிலத்திற்குள் எந்தவொரு வழக்கையும் பதிவு செய்ய சிபிஐ பஞ்சாப் அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், மகாராஷ்டிரம் மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலமும் சிபிஐக்கான பொதுஒப்புதலை திரும்பப்பெற்ற மாநிலங்களின் பட்டியலில் இணைந்துள்ளது.

Tags : punjab
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT