இந்தியா

திருமணத்துக்கு முந்தைய புகைப்பட நிகழ்ச்சியில் விபத்து; மணமக்கள் பலியான சோகம்

10th Nov 2020 08:54 AM

ADVERTISEMENT

மைசூரு: திருமணத்துக்கு முந்தைய புகைப்படமெடுக்கும் நிகழ்ச்சியில் நேரிட்ட விபத்தில் சிக்கி மணமக்கள் இருவருமே பலியான சோகம் இருவீட்டாரையும் வெகுவாகப் பாதித்துள்ளது.

மைசூரு நகரைச் சேர்ந்தவர்கள் சந்துரு - சசிகலா. இவர்களுக்கு வரும் நவம்பர் 22-ம் தேதி திருமணம் நடைபெற இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது.

திருமணத்துக்கு முன்பு, இருவரும் ஜோடியாக புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பி, மைசூரு அரண்மனை, காவிரி நதி, மற்றும் சில இடங்களில் புகைப்படக் கலைஞர்களை வைத்து புகைப்படம் எடுத்துக் கொள்ள மணமக்கள் விரும்பினர்.

அதன்படி, மைசூரு அரண்மனையில் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு, தாலக்காடு பகுதியில் காவிரி நதியில் புகைப்படங்களை எடுக்கச் சென்றனர். அங்கு அவர்களுக்கு படகு கிடைக்காததால், ஒரு பவளப்பாறை மீது ஏறி நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள திட்டமிட்டனர். சந்துரு பாறை மீது ஏறி நின்று கொள்ள, அப்போது சசிகலாவும் அந்த பாறையில் ஏற முயன்றார். ஆனால், அவர் மிக உயரமான குதிகால் கொண்ட காலணியை அணிந்திருந்ததால், பாறையில் கால் வழுக்கி, ஆற்றில் விழுந்தார். அவரைப் பிடிக்க முயன்ற சந்துருவும் ஆற்றுக்குள் விழுந்தார். இருவரும் ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்டனர்.

ADVERTISEMENT

அங்கிருந்த பொதுமக்களும், நீச்சல் தெரிந்தவர்களும் ஆற்றுக்குள் தேடிப் பார்த்தனர். விரைந்து வந்து காவல்துறையினர் மேற்கொண்ட மீட்புப் பணியில் 3 - 4 மணி நேரத்துக்குப் பிறகு இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமக்கள், புகைப்படம் எடுக்க விரும்பி, இப்படி உயிரை இழந்த சம்பவம் இருவீட்டாருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Tags : hot news
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT