இந்தியா

கல்லூரிகளைத் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது கர்நாடகம்

10th Nov 2020 12:36 PM

ADVERTISEMENT

கர்நாடக மாநிலத்தில் நவம்பர் 17ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

கரோனா தொற்று பரவல் நிலையின் அடிப்படையில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கர்நாடக மாநிலத்தில் நவம்பர் மாதம் 17ஆம் தேதி முதல் கல்லூரிகள்  திறக்கப்பட உள்ளதாக மாநில அரசு அறிவித்திருந்தது. 

அதனையொட்டி கல்லூரிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது. கல்லூரி திறக்கப்படுவதற்கு 3 நாள்களுக்கு முன் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் மற்றும் கிருமிநாசிகளைப் பயன்படுத்துதல் ஆகியவைகளை பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், அந்தந்த கல்லூரி அதிகாரிகள் தவறாமல் கிருமிநாசினிகளுடன் கதவு-கைப்பிடிகள், நாற்காலிகள் மற்றும் மேசைகளை சுத்தப்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Tags : karnataka
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT