இந்தியா

ஜம்மு காஷ்மீர் மாவட்ட கவுன்சில் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக

10th Nov 2020 01:47 PM

ADVERTISEMENT

ஜம்மு காஷ்மீரில் நடைபெற உள்ள மாவட்ட மேம்பாட்டுக் கவுன்சில் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் மாவட்ட மேம்பாட்டுக் கவுன்சில் தேர்தல் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை 8 கட்டங்களாக நடைபெற உள்ளது.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி 72 இடங்களுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி ஜம்மு பகுதிக்கு 35 வேட்பாளர்களும், காஷ்மீர் பகுதிக்கு 37 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து திரும்பப் பெறப்பட்டதற்குப் பின் ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் தேர்தல் என்பதால் இது அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

ADVERTISEMENT

Tags : jammu kashmir
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT