இந்தியா

நாட்டில் புதிதாக 38,074 பேருக்கு கரோனா; 448 பேர் பலி

10th Nov 2020 10:54 AM

ADVERTISEMENT


புது தில்லி: நாட்டில் செவ்வாய்க்கிழமை காலையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,074 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களில் 448 பேர் பலியாகியுள்ளனர்.

நாட்டில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த செய்திக் குறிப்பொன்றை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதில், நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 85,91,731 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கையும் 1,27,059 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிக்கலாமே.. திருமணத்துக்கு முந்தைய புகைப்பட நிகழ்ச்சியில் விபத்து; மணமக்கள் பலியான சோகம்

ADVERTISEMENT

நாட்டில் தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 5,05,265 ஆக உள்ளது. இது நேற்றைய நிலவரப்படி 4,408 குறைவாகும். கரோனாவிலிருந்து இதுவரை 79,59,406 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 42,033 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டிலேயே புதிதாக கரோனா பாதித்தவர்களில் புது தில்லியில் அதிகமானோர் உள்ளனர். மகாராஷ்டிரம் மற்றும் கேரளத்தில் புதிய கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT