இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் பட்டாசுகள் வெடிக்கக் கட்டுப்பாடுகள் விதிப்பு

10th Nov 2020 03:43 PM

ADVERTISEMENT

உத்தரப்பிரதேசத்தில் மிதமான அளவில் காற்று மாசடைந்த நகரங்களில் பசுமைப் பட்டாசுகளை மட்டும் வெடிக்க மாநில அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

கரோனா தொற்று பாதிப்பு மத்தியில் தீபாவளி பண்டிகை வருவதால் பட்டாசுகள் வெடிப்பது குறித்து பல்வேறு மாநில அரசுகளும் கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாடு குறித்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி காற்று மாசடைந்த நகரங்களில் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் முசாபர்நகர், ஆக்ரா, வாரணாசி, மீரட், ஹப்பூர், காஜியாபாத், கான்பூர், லக்னோ, மொராதாபாத், நொய்டா, கிரேட்டர் நொய்டா, பாக்பத், புலந்த்ஷாஹர் உள்ளிட்ட நகரங்களில் நவம்பர் 9 நள்ளிரவு முதல் நவம்பர் 30 நள்ளிரவு வரை அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக மேற்குவங்கம், ராஜஸ்தான், ஒடிசா, சிக்கிம், சண்டிகர் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : uttar pradesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT