இந்தியா

கனடாவில் கட்டடத்திலிருந்து விழுந்த ஹைதராபாத் மாணவன் பலி

10th Nov 2020 02:48 PM

ADVERTISEMENT


ஹைதராபாத்: ஹைதராபாத்தைச் சேர்ந்த 19 வயது மாணவர், கனடாவின் டோரன்டோ பகுதியில் உள்ள மிக உயர்ந்த கட்டடத்திலிருந்து விழுந்து பலியானார்.

பன்யம் அகில், ஹைதராபாத்தின் வனஸ்தானிபுரம் பகுதியைச் சேர்ந்தவர். டோரன்டோவில் தான் வசித்து வந்த அடுக்குமாடிக் கட்டடத்தின் 27வது மாடியில், செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருந்த போது, கால் தவறி கீழே விழுந்து உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்கலாமே.. கேரளத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ஸ்ரீகுட்டி யானை

இது குறித்து அவரது குடும்பத்தாருக்குக் கிடைத்த தகவலில், நவம்பர் 8-ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. செல்லிடப்பேசியில் வீட்டின் பால்கனியில் நடந்து கொண்டே பேசிக் கொண்டிருந்த போது நிலைதடுமாறி அவர் கீழே விழுந்து பலியாகியுள்ளார். இது குறித்து கனடாவில் உள்ள அவரது நண்பர்தான், ஹைதராபாத்தில் உள்ள குடும்பத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

கனடாவில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை படித்து வந்த அகில், கடந்த மார்ச் மாதம் ஹைதராபாத் வந்துவிட்டு, கடந்த மாதம்தான் கனடா திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Tags : accident canada
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT