இந்தியா

ஹரியாணா இடைத்தேர்தல்: பாஜகவின் யோகேஸ்வர் தத் தோல்வி

10th Nov 2020 05:21 PM

ADVERTISEMENT

நடைபெற்ற ஹரியாணா மாநில பரோடா சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட்ட விளையாட்டு வீரர் யோகேஸ்வர் தத் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்  இந்து ராஜ் நர்வாலிடம் தோல்வி அடைந்துள்ளார்.

ஹரியாணாவில் நடைபெற்ற பரோடா தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது. இந்நிலையில் பாஜக சார்பில் போட்டியிட்ட யோகேஸ்வர் தத் ஆரம்பம் முதலே காங்கிரஸ் வேட்பாளரிடம் பின்னடைவை சந்தித்து வந்தார்.

ஏழு சுயேச்சைகள் உட்பட 14 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்தத் தேர்தலில் மொத்தம் உள்ள 1.81 லட்சம் வாக்காளர்களில் 68 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர். இதில் காங்கிரஸ் கட்சியின் இந்து ராஜ் நர்வால் 17,827 வாக்குகளையும், யோகேஸ்வர் தத் 13,985 வாக்குகளையும் பெற்றனர்.

"தோல்விக்கான சரியான காரணம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் இது மக்கள் ஆணை. நான் கடுமையாக உழைத்தேன். கடினமாக உழைப்பேன்” என்று யோகேஸ்வர் தத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

Tags : haryana bypoll
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT