இந்தியா

கர்நாடக இடைத்தேர்தல்: 2 இடங்களிலும் பாஜக வெற்றி

10th Nov 2020 06:56 PM

ADVERTISEMENT


கர்நாடக இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் நவ. 3-ஆம் தேதி ராஜராஜேஸ்வரி நகர், சிரா ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இந்த 2 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.

ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட முனிரத்னா 60.14 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சிரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ராஜேஷ் கௌடா 42.01 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

Tags : bjp
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT