இந்தியா

குஜராத்தில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்ற அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி!

10th Nov 2020 08:36 PM

ADVERTISEMENT

 

காந்திநகர்: குஜராத்தில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்ற எட்டு தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

குஜராத்தில் இந்த ஆண்டு ஜூன் மாதம் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எட்டு எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்தனர். இதையடுத்து அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

தேர்தலில் வாக்குப்பதிவு முடிவடைந்து பதிவான வாக்குகள் செவ்வாயன்று எண்ணப்பட்டது. இதில் இடைத்தேர்தல் நடைபெற்ற எட்டு தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

ADVERTISEMENT

பாரதிய ஜனதா கட்சியானது டாங்க்ஸ், அப்டசா , தாரி, கப்ரதா, கர்ஜன். மோர்பி, லிம்ப்டி மற்றும் கத்கதா ஆகிய எட்டுத் தொகுதிகளிலும் காங்கிரசை குறிப்பிடத்தக்க வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளது.

இந்தத் தேர்தலுக்காக காங்கிரஸ் ஹர்திக் படேலை மாநிலத்தில் கட்சியின் செயல் தலைவராக நியமித்தது என்பது குறிப்பிடத்தக்கது

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT