இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக

10th Nov 2020 09:56 AM

ADVERTISEMENT

 

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்று முடிந்த 28 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதுவரை எண்ணப்பட்ட வாக்கு நிலவரங்களின் அடிப்படையில், பாஜக 19 இடங்களிலும், காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

28 சட்டப்பேரவைக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில்,  8 தொகுதிகளில் வென்றாலே பாஜக தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் நிலையில், 19 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்கலாமே.. திருமணத்துக்கு முந்தைய புகைப்பட நிகழ்ச்சியில் விபத்து; மணமக்கள் பலியான சோகம்

தற்போது, மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில், பாஜகவுக்கு 107 இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு 87 இடங்களும் உள்ளன. மொத்தமுள்ள 230  இடங்களில் ஒரு இடம் காலியாகி 229 ஆக உள்ளதால், பெரும்பான்மைக்கு 115 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மத்திய பிரதேச இடைத்தோ்தலில் 16 முதல் 18 இடங்களைக் கைப்பற்றி பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

Tags : Madhya Pradesh bjp
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT