இந்தியா

பாஜக - ஐக்கிய ஜனதா தள கூட்டணி தொடர்ந்து முன்னிலை

10th Nov 2020 04:27 PM

ADVERTISEMENT

பிகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பாஜக - ஐக்கிய ஜனதா தள கூட்டணி 123 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. 

பிகாா் சட்டப் பேரவையில் 243 இடங்களுக்கான தோ்தல் முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி(ஐக்கிய ஜனதா தளம்-பாஜக) 123 இடங்களிலும், மகா கூட்டணி (ராஷ்ட்ரீய ஜனதா தளம்- காங்கிரஸ்) 111 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. 

பிற்பகல் 4 மணி நிலவரப்படி, 42% வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ADVERTISEMENT

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக வாக்கு எண்ணிக்கை மையங்களில் இடைவெளி அதிகரிக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டதால், வாக்கு எண்ணிக்கை சுற்றுகளும் அதிகரித்துள்ளன. இதனால், முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Tags : bjp
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT