இந்தியா

பிகார் பேரவைத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

10th Nov 2020 08:22 AM

ADVERTISEMENT

 

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. 55 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

பிகாரில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 122 தொகுதிகளில் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் கரோனா தொற்றுப் பரவல் முன்னெச்சரிக்கையாக தலா 7 மேஜைகள் போடப்பட்டு, மூன்று அடுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பிகார் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் இடங்களில், அளவுக்கு அதிகமான ஆள்கள் கூடுவதை தவிர்க்க 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

Tags : bihar election bihar poll election commission
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT