இந்தியா

கேரளத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ஸ்ரீகுட்டி யானை

10th Nov 2020 02:30 PM

ADVERTISEMENT


திருவனந்தபுரம்: கோட்டூர் யானைகள் நல்வாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் ஸ்ரீகுட்டி யானை, நவம்பர் 8-ம் தேதி தனது முதல் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடியது.

அதனுடன் 15 யானைகளும், அதன் பாகனும், ஸ்ரீகுட்டிக்கு சிகிச்சை அளித்து, அதன் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர் இ.கே. ஈஸ்வரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அரிசி, கேழ்வரகுக் கொண்டு செய்யப்பட்ட கேக்கில், பிறந்தநாள் வாழ்த்துகள் ஸ்ரீகுட்டி என்று எழுதப்பட்டிருந்தது. தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, பலரும் நெகிழும் வகையில், தன்னுயிரைக் காப்பாற்றிய வனத்துறை கால்நடை மருத்துவர் (ஓய்வு) இ.கே. ஈஸ்வரா தலையை, தனது தும்பிக்கையால் தடவிக் கொடுத்து ஸ்ரீகுட்டி தனது நன்றி மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

கடந்த ஆண்டு இதே நாளில் தென்மலா வனப்பகுதியில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் ஸ்ரீகுட்டி கண்டெடுக்கப்பட்டு, கோட்டூர் நல்வாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டது. அது மீட்கப்பட்டபோது, உயிர்பிழைக்க வெகுக் குறைவான வாய்ப்புகளே இருந்தன.  ஆனால் இந்த ஸ்ரீகுட்டியை உயிர்ப்பிழைக்க வைக்க வனத்துறையினர் மேற்கொண்ட கடும் முயற்சி சொல்லில் மாளாது. எனவே, ஸ்ரீகுட்டியை வனத்துறையினர் மீட்ட நாளையே அதன் பிறந்தநாளாகக் கொண்டாட திட்டமிடப்பட்டது.

ADVERTISEMENT

ஸ்ரீகுட்டியை நாங்கள் பார்த்தபோது, அதன் கால் பகுதி கடுமையாக சிதைந்திருந்தது. அதன் உடல் முழுக்க காயங்கள், மிக மோசமான ஆற்று வெள்ளத்தில் அது அடித்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும், பிறந்து ஒரு சில வாரங்களே ஆகியிருந்த ஸ்ரீகுட்டி, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் அதன் பெற்றோரிடமிருந்து பிரிந்திருக்க வேண்டும் என்று கருதப்பட்டது.

அப்போது அதன் உயிர்பிழைக்கும் வாய்ப்பு 40% மட்டுமே இருந்தது என்கிறார் வனக்காவலர் சதீஷன். அதை மீட்டபோது கூட உடனடியாக நல்வாழ்வு மையத்துக்குக் கொண்டுவரவில்லை, அதன் தாய் தேடி வரும் என்று ஒரு நாள் முழுக்க அப்பகுதியிலேயே வைத்திருந்தோம். ஆனால் வரவில்லை.

நல்வாழ்வு மையத்தில் ஸ்ரீகுட்டிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதற்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு, லேக்டோஜன் அளிக்கப்பட்டது. சற்று உடல்நிலை தேறியதும், பி புரதச் சத்து நிறைந்த உணவுகளும், ராகியும் அதன் உணவில் சேர்க்கப்பட்டது என்கிறார் தாயுள்ளத்தோடு.
 

Tags : elephant
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT