இந்தியா

உச்ச நீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி மேல்முறையீடு

10th Nov 2020 03:29 PM

ADVERTISEMENT

இடைக்கால ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அர்னாப் கோஸ்வாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 2018-ஆம் ஆண்டு மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த கட்டட வடிவமைப்பாளரை தற்கொலைக்குத் தூண்டியதாக ஊடகவியலாளரும், தனியார் தொலைகாட்சியின் ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமி மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 4 ஆம் தேதி அர்னாப் சிபிஐ அதிகாரிகளால்  கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர் தற்போது 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் உள்ளார். 

அர்னாப் கோஸ்வாமியின் இடைக்கால ஜாமீன் மனு தள்ளுபடி

இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் அர்னாப் கோஸ்வாமியின் இடைக்கால ஜாமீன் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

ADVERTISEMENT

தொடர்ந்து, மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அர்னாப் கோஸ்வாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று தெரிகிறது. 

Tags : Arnab
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT