இந்தியா

தெலங்கானா சாலை விபத்தில் ஆறு பேர் பலி

10th Nov 2020 03:41 PM

ADVERTISEMENT

 

சங்கர் ரெட்டி: தெலங்கானா மாநிலம் சங்கர் ரெட்டி மாவட்டத்தில் திங்கள் இரவு நடந்த சாலை விபத்தில், காரில் பயணம் செய்த ஆறு பேர் பலியாகினர்.

இந்த விபத்து தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சேகர் ரெட்டி கூறியதாவது:

சங்கர் ரெட்டி மாவட்டம் முத்தங்கி வெளிவட்டச் சுற்றுப் பாதையில் திங்கள் இரவு சாலை விபத்து ஒன்று நடந்துள்ளது. இதில் பெங்களூருவில் இருந்து நாக்பூர் நோக்கிப் பயணம் செய்த காரானது, தனக்கு முன்னால் சென்ற மினி லாரியுடன் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். மூன்று பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கார் ஓட்டுனர் தப்பி ஓடி விட்டார்.

ADVERTISEMENT

இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT