இந்தியா

11 மாநில இடைத்தோ்தல்: முன்னிலை நிலவரங்கள்

10th Nov 2020 10:34 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக 58 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

உத்தர பிரதேசத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்குக் கடந்த 3-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது.  இடைத்தேர்தல் நடைபெற்ற 7 தொகுதிகளில் பாஜக 4 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 28 பேரவைத் தொகுதிகளில், பாஜக 19 இடங்களிலும், காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

ADVERTISEMENT

குஜராத் பேரவையில் காலியாக உள்ள 8 இடங்களுக்கு நடந்த தேர்தலில், பாஜக 7 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது. ஜார்க்கண்ட்டில் இடைத் தேர்தல் நடைபெற்ற இரண்டு தொகுதிகளிலும்  தெலங்கானாவில் ஒரே ஒரு தொகுதியிலும் பாஜக முன்னிலையில் உள்ளது.

நாகாலாந்து, ஜாா்க்கண்ட், ஒடிஸா, கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா இரு பேரவைத் தொகுதிகளுக்கும், தெலங்கானா, ஹரியாணா, சத்தீஸ்கா் சட்டப் பேரவைகளில் காலியாக உள்ள தலா ஓரிடத்துக்கும் கடந்த 3-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது.

மணிப்பூா் சட்டப் பேரவையில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு கடந்த 7-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது. 

இடைத்தோ்தல்களில் பதிவான வாக்குகள் அனைத்தும் அந்தந்த மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் இன்று எண்ணப்படுகின்றன. அனைத்து மையங்களிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

Tags : election
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT