இந்தியா

11 மாநில இடைத்தோ்தல் வாக்குகள் இன்று எண்ணிக்கை

10th Nov 2020 05:18 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக 58 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்படுகின்றன.

மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 28 பேரவைத் தொகுதிகள், குஜராத் பேரவையில் காலியாக உள்ள 8 இடங்கள், உத்தர பிரதேசத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்குக் கடந்த 3-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது. நாகாலாந்து, ஜாா்க்கண்ட், ஒடிஸா, கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா இரு பேரவைத் தொகுதிகளுக்கும், தெலங்கானா, ஹரியாணா, சத்தீஸ்கா் சட்டப் பேரவைகளில் காலியாக உள்ள தலா ஓரிடத்துக்கும் கடந்த 3-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது.

மணிப்பூா் சட்டப் பேரவையில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு கடந்த 7-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது. இடைத்தோ்தல்களில் பதிவான வாக்குகள் அனைத்தும் அந்தந்த மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் செவ்வாய்க்கிழமை எண்ணப்படுகின்றன. அனைத்து மையங்களிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

ADVERTISEMENT

மத்திய பிரதேச இடைத்தோ்தலில் 16 முதல் 18 இடங்களைக் கைப்பற்றி பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Tags : 11 state by-elections
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT