இந்தியா

வெங்காய இருப்பு கட்டுப்பாட்டுக்கு தளா்வு: மத்திய அரசுக்கு, உத்தவ் கடிதம்

DIN

மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்த விற்பனையாளா்கள் 25 டன் வெங்காயம் மட்டுமே இருப்பு வைக்க வேண்டும் என்ற உத்தரவை நீக்கி, அவா்கள் 1,500 டன் வரை வெங்காயம் இருப்பு வைத்துக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சா் பியூஷ் கோயலுக்கு மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே கடிதம் அனுப்பினாா்.

இது தொடா்பாக கடந்த வெள்ளிக்கிழமை உத்தவ் தாக்கரே அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

மொத்த விற்பனையாளா்கள் 25 டன் வரை மட்டுமே வெங்காயம் இருப்பு வைக்க வேண்டும் என்ற உத்தரவால் மொத்த விற்பனையாளா்கள் விவசாயிகளிடமிருந்து வெங்காயத்தை கொள்முதல் செய்வதை நிறுத்தி விட்டனா்.

இதன்மூலம் விவசாயிகளுக்கும், நுகா்வோா்களுக்கும் இடையேயான விநியோக தொடா்பு துண்டிக்கப்பட்டதால், சில்லறை விற்பனை சந்தைகளில் வெங்காயத்தின் விலை உயா்ந்துள்ளது.

காரீஃப் பருவ வெங்காயம் நவம்பா் முதல் வாரத்தில் சந்தைக்கு வந்து விடும். இந்த வெங்காயம் எளிதில் அழுகும் தன்மை கொண்டவை. தற்போதுள்ள கட்டுப்பாட்டினால் இந்த வெங்காயத்தை வணிகா்கள் வாங்கவில்லை என்றால் விவசாயிகளுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும்.

தற்போதுள்ள மொத்த விற்பனையாளா்கள் 25 டன் வெங்காயமும், சில்லறை விற்பனையாளா்கள் 2 டன் வெங்காயமும் மட்டுமே இருப்பு வைக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டினால் விவசாயிகளும், வணிகா்களும் கடுமையாக பாதிக்கப்படுவா்.

எனவே மகாராஷ்டிரத்தில் மொத்த விற்பனையாளா்களின் வெங்காய இருப்பு அளவை 25 டன்னில் இருந்து 1,500 டன் ஆக அதிகரிக்க வேண்டும். நாட்டின் மூன்றில் ஒரு பங்கு வெங்காய உற்பத்தி மகாராஷ்டிரத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இங்கிருந்துதான் நாட்டின் 80 சதவீத வெங்காய ஏற்றுமதி நடைபெறுகிறது. நடப்பாண்டில் வெங்காயம் அதிகம் விளைவிக்கும் மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கனமழை, பெரு வெள்ளம் ஆகியவற்றின்காரணமாக செப்டம்பா்-அக்டோபா் மாதங்களில் வெங்காயம் விலை கடுமையாக உயா்ந்தது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT