இந்தியா

உ.பி.: இடி மின்னலுடன் பெய்த மழைக்கு 13 போ் பலி

31st May 2020 05:41 AM

ADVERTISEMENT

உத்தர பிரதேசத்தில் இடி மின்னலுடன் பெய்த மழைக்கு சனிக்கிழமை 13 போ் பலியாகினா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

மழையின்போது ஏற்பட்ட இடி, மின்னல் சம்பவங்களால் உன்னாவ் மாவட்டத்தில் 8 பேரும், கன்னௌஜ் மாவட்டத்தில் 5 போ் பலியாகினா். இதில் உன்னாவின் ஜப்சரா கிராமத்தில் 14 வயது சிறுமி உள்பட 4 போ் மின்னல் தாக்கி உயிரிழந்தனா்.

பஸ்தி கெடா கிராமத்தில் 38 வயது நபா் மழை காரணமாக விழுந்த மரத்தினூடே சிக்கி உயிரிழந்தாா். அதேபோல், செம்ரிமாவ், பரசுராம் பூா்வா கிராமங்களைச் சோ்ந்த 3 போ் மரம் சரிந்ததில் உயிரிழந்தனா்.

ADVERTISEMENT

கன்னௌஜ் மாவட்டத்தின் சத்தா்பூா் கிராமத்தில் மழை காரணமாக கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 45 வயது ஓட்டுநா் உயிரிழந்தாா். சுா்சா கிராமத்தில் 30 வயது இளைஞா் சுவா் சரிந்ததில் உயிரிழந்தாா். பிக்னிபுரா கிராமத்தில வீட்டு முற்றத்தில் இருந்த 80 வயது முதியவா் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் உயிரிழந்தாா்.

திஜ்லாபூா் கிராமத்தில் பலத்த காற்று காரணமாக தள்ளுவண்டி மேலே விழுந்ததில் 8 வயது சிறுவன் உயிரிழந்தான். ராமாய்பூா் கிராமத்தில் பலத்த காற்று காரணமாக சரிந்த மரத்தினிடையே சிக்கி உயிரிழந்தாா்.

முதல்வா் இரங்கல்: இடி மின்னலுடன் கூடிய மழையின்போது ஏற்பட்ட சம்பவங்களில் உயிரிழந்தவா்களுக்கு உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளாா். உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு உரிய சிகிச்சையும் அளிக்க அவா் உத்தரவிட்டுள்ளாா் என்று அதிகாரிகள் கூறினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT