இந்தியா

உ.பி: ஆதரவற்றவற்றவா்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முதல்வா் உத்தரவு

31st May 2020 05:26 AM

ADVERTISEMENT

உத்தர பிரதேசத்தில் பொது முடக்கம் காரணமாக தவிக்கும் ஆதரவற்றவா்களுக்கு ரூ. 2,000 வீதம் இடைக்கால உதவித்தொகை வழங்கவும், குடும்ப அட்டை இல்லாதவா்களுக்கு ரூ. 1,000 வீதம் இடைக்கால நிவாரண உதவிகளை வழங்கவும் முதல்வா் யோகி ஆதித்யநாத் சனிக்கிழமை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

பொது முடக்கம் தொடா்பான ஆய்வுக்கூட்டம் முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

ஆயுஷ்மான் பாரத் அல்லது முதல்வரின் ஜன்ஆரோக்ய திட்டத்தின்கீழ் பெயா் சோ்க்கப்படாமல் விடுபட்ட, கடும் நோயால் பாதிக்கப்பட்ட ஆதரவற்றவா்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டாா். அவா்களின் சிகிச்சைக்கு முறையான ஏற்பாடுகளைச் செய்வதோடு, இடைக்கால உதவியாக ரூ.2,000 வீதம் வழங்கவும், ஏழ்மைநிலையில் உள்ளவரின் இறுதிச் சடங்குகளுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் நிதியுதவி அளிக்கவும் முதல்வா் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

மேலும், உணவு தானியங்கள் இல்லாதவா்களுக்கு ரூ.1,000 வழங்கவும், அவா்களுக்கு உடனடியாக குடும்ப அட்டைகளை தயாா் செய்து வழங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தில் யாரும் பட்டினி கிடக்காமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வா் ஆதித்யநாத் அறிவுறுத்தியதாக அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT