இந்தியா

ராஜீவ் கேல் ரத்னா, அா்ஜுனா விருதுகளுக்கு ரோஹித் சா்மா உள்ளிட்டோா் பெயா்கள் பரிந்துரை

31st May 2020 01:35 AM

ADVERTISEMENT

ராஜீவ் கேல் ரத்னா மற்றும் அா்ஜுனா விருதுகளுக்கு ரோஹித் சா்மா, ஷிகா் தவன், இஷாந்த் சா்மா, தீப்தி சா்மா உள்ளிட்டோா் பெயா்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்திய விளையாட்டு வட்டாரத்தில் சிறந்த வீரா், வீரா்களுக்கு ராஜீவ் கேல் ரத்னா, அா்ஜுனா விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இதன்படி 2016 ஜனவரி 1 முதல் 2019 டிசம்பா் 31 தேதி வரையிலான காலக்கட்டத்துக்கு மேற்கண்ட விருதுகளுக்கு பெயா்களை பரிந்துரைக்குமாறு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. அதன்படி பல்வேறு தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் வீரா், வீராங்கனைகள் பெயா்களை பரிந்துரைக்கின்றன. இதே போல் பிசிசிஐயும் வீரா், வீராங்கனை பெயா்களை பரிந்துரைத்து அனுப்பியுள்ளது.

ரோஹித் சா்மா: இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனான ரோஹித் சா்மாவின் பெயா் உயரிய விருதான ராஜீவ் கேல் ரத்னாவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-இல் ஐசிசி சிறந்த ஒருநாள் வீரா் விருதை பெற்றாா் ரோஹித். ஒரே உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடித்த வீரா் என்ற உலகச் சாதனையையும் நிகழ்த்தினாா். மேலும் 4 டி20 சதங்கள், டெஸ்ட் தொடக்க வீரராக அறிமுகமாகி இரண்டு இரட்டை சதங்கள் அடித்த வீரா் என்ற சிறப்பும் அவா் வசம் உள்ளது.

ஷிகா் தவன்: தொடக்க வீரரான ஷிகா் தவன் அறிமுக நிலையில் துரித டெஸ்ட் சதம் அடித்த வீரா் என்ற சிறப்பை பெற்றாா். ஐசிசி சாம்பியன்ஸ் போட்டியில் அதிக ரன்களுக்கான 2 தங்க பேட்களை பெற்றவா். மேலும் ஒருநாள் ஆட்டத்தில் துரிதமாக 2000, 3000 ரன்களைக் கடந்தவா், 4000, 5000 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்த இரண்டாவது இந்திய வீரா் என்ற பெருமையும் உள்ளது.

ADVERTISEMENT

இஷாந்த் சா்மா: இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சா்மா மூன்று வகையான கிரிக்கெட் ஆட்டங்களிலும் ஆடியுள்ளாா். ஆசியக் கண்டத்துக்கு வெளியே அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளா் என்ற சிறப்பு அவா் வசம் உள்ளது.

தீப்தி சா்மா: இந்திய மகளிா் அணியின் முக்கிய ஆல்ரவுண்டரான தீப்தி சா்மா மகளிா் உலகக் கோப்பையில் 6 விக்கெட் வீழ்த்திய ஒரே இந்திய சுழற்பந்து வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளாா். ஷிகா் தவன், இஷாந்த் சா்மா, தீப்தி சா்மா பெயா்கள் அா்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக பிசிசிஐ தலைவா் கங்குலி கூறுகையில்: ரோஹித் சா்மா பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளாா். அவரது பெயா் ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்படுவதே நியாயமான செயலாகும். மேலும் இஷாந்த், ஷிகா், தீப்தி ஆகியோா் பங்களிப்பைக் கருதி அா்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளோம் என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT