இந்தியா

'அரசு மருத்துவமனையின் அலட்சியம்': கையுறைகள் இல்லை; குழந்தையை இழந்த கர்ப்பிணிப்பெண்!

31st May 2020 04:23 PM

ADVERTISEMENT

 

அரசு சுகாதார மையத்தில் அறுவை சிகிச்சை கையுறைகள் இல்லாததால் கர்ப்பிணி பெண் ஒருவர் தந்து குழந்தையை இழந்துள்ளார். 

உத்தரப் பிரதேசத்தில் கடந்த மே 18 அன்று இரவு 9.30 மணியளவில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, கணவர் அனில் குமாருடன் எட்மத்பூர் தொகுதியில் உள்ள அரசு சுகாதார மையத்திற்குச் சென்றார். 

மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கான கையுறைகள் இல்லாததால் அடுத்தநாள் வரும்படி கூறியுள்ளனர். பின்னர் அனில் குமார் கெஞ்சி கேட்கவே, கையுறைகள் வாங்கிவந்தால் சிகிச்சை அளிக்கிறோம் என்று கூறியுள்ளனர். 

ADVERTISEMENT

இதையடுத்து, கையுறைகள் வாங்கச் சென்ற அனில் குமார், இரவு 11 மணி என்பதால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அலைந்தும் கையுறைகள் கிடைக்கவில்லை எனக்கூறி திரும்பி வந்தார். பின்னர் மனைவியுடன் வீட்டிற்குத் திரும்பிவிட்டார். 

அதற்கு மறுநாள் மனைவியை சுயநினைவற்ற நிலையில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் அனில் குமார். ஆனால், குழந்தை பெண்ணின் வயிற்றிலேயே இறந்துள்ளது. பின்னர் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து இறந்த குழந்தையை வெளியே எடுத்தனர். 

அரசு சுகாதார மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் எனது குழந்தை காப்பாற்றப்பட்டிருக்கும். சுகாதார மையத்தில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மீது அரசு அதிகாரிகள் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனில் குமார் தெரிவித்தார். 

வறுமை, பொருளாதார சூழ்நிலை காரணமாக அரசு மருத்துவமனையை நம்பிச் செல்லும் எண்ணற்ற ஏழை, நடுத்தர மக்கள் சிலரின் அலட்சியத்தால் இதுபோன்று ஈடுகட்ட முடியாத இழப்பினை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT