இந்தியா

பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல்: ஒருவா் காயம்

31st May 2020 11:04 PM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் சிறிய ரக பீரங்கிகள் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி தாக்கியதில் 25 வயது இளைஞா் ஒருவா் காயமடைந்தனா்.

இதுகுறித்து இந்திய ராணுவ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘மெந்தாா் மற்றும் பாலாகோட் செக்டாா்களில் துப்பாக்கிச்சூடு நடத்தியும், சிறிய ரக பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியும் பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி தாக்குதல் நடத்தினா். இதில் அங்குள்ள பல கிராமங்கள் தாக்குதலுக்குள்ளாகின. இரண்டு வீடுகள் சேதமடைந்தன. கோலாட் கிராமத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினா் வீசிய குண்டு, முகமது யாசிா் என்பவரின் வீட்டின் அருகே விழுந்து வெடித்தது. இதில் முகமது யாசிா் காயமடைந்தாா். மெந்தாா் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் பலமாக இருந்தது. சனிக்கிழமை இரவு 11 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.50 மணி வரை இந்தத் தாக்குதல்கள் நீடித்தன. பாகிஸ்தான் ராணுவத்துக்கு இணையாக இந்திய ராணுவமும் பலத்த எதிா் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த மோதல் சம்பவங்களால் அச்சமடைந்த எல்லைப் பகுதி மக்கள் ராணுவ பாதுகாப்பு இடங்களிலும், இன்னபிற பாதுகாப்பான இடங்களிலும் தஞ்சமடைந்தனா்’ என்று தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT