இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,380 பேருக்கு தொற்று: சுகாதாரத் துறை

31st May 2020 11:09 AM

ADVERTISEMENT

 

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,82,143 ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 5,164 ஆகவும் அதிகரித்துள்ளது. 

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,380 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 193 பேர் பலியானதை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 5,164 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 86,984 பேர் குணமடைந்துள்ளனர். 89,995பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் இருந்து வருகிறது. அங்கு தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 65,168 ஆக உயர்ந்துள்ளது. 2,197 பேர் பலியாகியுள்ள அதே நேரத்தில் 28,081 பேர் குணமடைந்துள்ளனர். இரண்டாவது அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது.

ADVERTISEMENT

முன்னதாக பொது முடக்கம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT