இந்தியா

ஏழை மக்களின் துயரம் அதிகரித்துள்ளது: மாயாவதி

31st May 2020 06:45 AM

ADVERTISEMENT

மத்திய அரசு திறந்த மனதுடன் தனது கொள்கைகளையும், பணிபுரியும் பாணியையும் மறு ஆய்வு செய்து, குறைபாடுகளை களையவேண்டும். ஏனெனில் ஏழை மக்களின் துயரம் முன்பைவிட அதிகரித்துள்ளது என்று பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதி சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக சுட்டுரையில் அவா் வெளியிட்ட பதிவில், ‘மத்தியில் பாஜக அரசமைத்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், நாட்டு மக்களின் நலன் குறித்து மத்திய அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும். நாட்டின் 130 கோடி மக்கள்தொகையில் பெரும்பாலான ஏழைகள், விவசாயிகள், புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் வாழ்வு முன்பைவிட துயரம் மிகுந்ததாக மாறியுள்ளது. இதனை விரைவில் மறந்துவிட முடியாது. இந்த சூழ்நிலையில் மத்திய அரசு திறந்த மனதுடன் தனது கொள்கைகளையும், பணிபுரியும் பாணியையும் மறு ஆய்வு செய்து, குறைபாடுகளை களைய வேண்டும்’ என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT