இந்தியா

வெட்டுக்கிளி தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உதவும்: பிரதமர் மோடி உறுதி

31st May 2020 12:51 PM

ADVERTISEMENT

 

சமீபத்திய நாள்களில் வெட்டுக்கிளி தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவி செய்யப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். 

பிரதமா் மோடி, ‘மனதின் குரல்’ என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆற்றிய உரையில் கூறியதாவது:

நாட்டின் சில பகுதிகளில் வெட்டுக்கிளித் தாக்குதல் இருந்து வருகிறது. பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளித் தாக்குதலில் இருந்து விவசாயிகளைக் காக்க அரசு சார்பில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெட்டுக்கிளித் தாக்குதலை தடுக்க முயற்சி எடுக்கப்படும்.

ADVERTISEMENT

மேலும், சமீபத்திய நாள்களில் வெட்டுக்கிளி தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் அரசு தேவையான உதவியைச் செய்யும் என்று தெரிவித்தார். 

Tags : PMModi
ADVERTISEMENT
ADVERTISEMENT