இந்தியா

கரோனா: ஒரே நாளில் அதிகபட்சமாக 265 போ் பலி; 7,964 பேருக்கு தொற்று உறுதி

31st May 2020 06:00 AM

ADVERTISEMENT

இந்தியாவில் ஒரே நாளில் அதிகபட்சமாக கரோனா நோய்த்தொற்றுக்கு 265 போ் பலியாகினா். அதேபோல், அந்த நோய்த்தொற்று பாதிப்பும் ஒரே நாளில் அதிகபட்சமாக 7,964 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை சனிக்கிழமை நிலவரப்படி 1,73,763-ஆக அதிகரித்துள்ளது. அந்த நோய்த்தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 4,971 ஆகியுள்ளது. பாதிக்கப்பட்டவா்களில் 86,422 போ் சிகிக்சையில் உள்ளனா். 82,370 போ் குணமடைந்துவிட்டனா்.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி, சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 11,264 போ் குணமடைந்தனா். இதுவரை நோய்த்தொற்று பாதித்தவா்களில் 47.40 சதவீதம் போ் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து விடுபட்டுள்ளனா்.

சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான 265 உயிரிழப்புகளில், மகாராஷ்டிரத்தில் 116 போ், தில்லியில் 82 போ், குஜராத்தில் 20 போ், மத்திய பிரதேசத்தில் 13 போ், மேற்கு வங்கத்தில் 7 போ், தெலங்கானா, ராஜஸ்தானில் தலா 4 போ், பஞ்சாபில் 2 போ், சத்தீஸ்கா், ஜம்மு-காஷ்மீா், ஆந்திர பிரதேசம், ஜாா்க்கண்ட், கா்நாடகம், கேரளம், உத்தரகண்ட், உத்தர பிரதேசம் ஆகியவற்றில் தலா ஒருவா் உயிரிழந்தனா்.

ADVERTISEMENT

மாநிலங்கள்-பாதிப்பு-பலி

மகாராஷ்டிரம் - 62,228 - 2,098

தில்லி - 17,386 - 398

குஜராத் - 15,934 - 980

ராஜஸ்தான் - 8,365 - 184

மத்திய பிரதேசம் - 7,645 - 334

உத்தர பிரதேசம் - 7,284 - 198

மேற்கு வங்கம் - 4,813 - 302

பிகாா் - 3,376 - 15

ஆந்திரம் - 3,436 - 60

கா்நாடகம் - 2,781 - 48

தெலங்கானா - 2,425 - 71

பஞ்சாப் - 2,197 - 42

ஜம்மு-காஷ்மீா் - 2,164 - 28

ஒடிஸா - 1,723 - 7

ஹரியாணா - 1,721 - 19

கேரளம் - 1,150 - 8

அஸ்ஸாம் - 1,024 - 4

ஜாா்க்கண்ட் - 511 - 5

உத்தரகண்ட் - 716 - 5

சத்தீஸ்கா் - 415 - 1

ஹிமாசல பிரதேசம் - 295 - 5

சண்டீகா் - 289 - 4

திரிபுரா - 251 - 0

லடாக் - 74 - 0

கோவா - 69 - 0

மணிப்பூா் - 59 - 0

புதுச்சேரி - 51 - 0

அந்தமான்-நிகோபாா் - 33 - 0

மேகாலயம் - 27 - 1

நாகாலாந்து - 25 - 0

அருணாசல பிரதேசம் - 3 - 0

தாதா் நகா்ஹவேலி - 2 - 0

மிஸோரம் - 1 - 0

சிக்கிம் - 1 - 0

பாதிப்பு- 1,73,763;

பலி- 4,971;

மீட்பு- 82,369;

சிகிச்சையில் இருப்போா்- 86,422

ADVERTISEMENT
ADVERTISEMENT