இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 47.76 சதவீதமாக இருப்பதாக மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதுபற்றி அமைச்சகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
"கடந்த 24 மணி நேரத்தில் 4,614 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 86,983 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து குணமடைவோர் விகிதம் 47.76 சதவீதமாக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 89,995."
மத்திய சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய தகவலின்படி,
ADVERTISEMENT
மொத்தம் பாதிப்பு: 1,82,143
மொத்தம் குணமடைந்தோர்: 86,984
மொத்தம் பலியானோர்: 5,164