இந்தியா

உத்தரகண்ட்: அமைச்சர் மற்றும் அவருடன் தொடர்பிலிருந்த 22 பேருக்கு கரோனா தொற்று

31st May 2020 06:12 PM

ADVERTISEMENT


உத்தரகண்டில் மாநில அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 22 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநில தலைமைச் செயலர் உத்பல் குமார் இதுபற்றி தெரிவித்ததாவது:

"உத்தரகண்ட் அரசின் மாநில அமைச்சருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரிடம் பணியாற்றுபவர்கள் என மொத்தம் 22 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது."

முன்னதாக வெளியான தகவலின்படி: 

ADVERTISEMENT

உத்தரகண்டில் இன்று புதிதாக 53 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 802 ஆக உயர்ந்துள்ளது.  

ADVERTISEMENT
ADVERTISEMENT